கொரோனாவிற்குரிய அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்

சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றிருக்கிறது.

இதில் பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

முதலில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இப்பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருடைய இரத்த மாதிரி பரிசோதனைக்காக பெறப்பட்டது.

இதனிடையே அவர் திடீரென நேற்று மாலை உயிரிழந்த செய்தி வைத்தியசாலை முழுவதும் பரவியதை அடுத்து ஏனைய நோயாளர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு அமைதியின்மையும் ஏற்பட்டிருக்கிறது.

இறுதியில் அவரது இரத்தமாதிரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே மருத்துவமனை வழமைபோல இயங்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Kathiradmin