ஜனாசாக்களை அடக்கம் செய்ய இலங்கையில் ஏன் மறுக்கிறார்கள்? பைசர் முஸ்தபா

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை 180 உலக நாடுகள் அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளதை போன்று இலங்கையிலும் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள காணொளியில் பேசியதாவது,

“ஜனாசாக்களை அடக்கம் செய்வதே முஸ்லிம் மதத்தின் கோட்பாடு. ஆனால் தற்போது ஒரிரு ஜனாசாக்கள் எரிக்கப்பட்டதை எண்ணி வேதனையடைகிறேன்.

உலகில் 180 நாடுகள் முஸ்லிம்களின் ஸனாசாக்களை அடக்கம் செய்ய இணங்கியுள்ள நிலையில் இலங்கையில் மாத்திரம் அதற்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்?

இதனை ஒரு போராட்ட கருத்தாக தாம் முன் வைக்கவில்லை. மாறாக முஸ்லிம் மக்களின் மத கோட்பாட்டுக்கமையவே இந்த கோரிக்கையை விடுக்கிறேன்.

ஜனாசாக்களை அடக்கம் செய்வதால் கொரோனா வைரஸ் பரவும் என்பதை நிரூபித்தால் அவ்வாறான ஒரு அனுமதியை வழங்க வேண்டாம்” என்று பேசியுள்ளார்.

You May Also Like

About the Author: Kathiradmin