நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் 7ஆவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மனுக்களை இறுதியில் தள்ளுபடிசெய்யவா உயர்நீதிமன்றத்தின் விசாரணைகள் இவ்வாறு ஒத்திவைக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சிவில் அமைப்புகளினாலும், எதிர்க்கட்சிகளினாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் திகதி வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றை சவாலுக்குட்படுத்தியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. நேற்று 7ஆவது நாளாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனுக்களை இறுதியில் தள்ளுபடிசெய்யவா உயர்நீதிமன்றத்தின் விசாரணைகள் இவ்வாறு ஒத்திவைக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் .