கைதான பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பிரிவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (28) மாலை நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தபோதே இவ் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்குரிய ஒப்புதல் அடிப்படையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir