தந்தையின் கனவை நான் நிறைவேற்றுவேன் ; மகன் ஜீவன் தொண்டமான் உறுதி

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை தாம் நிறைவேற்றுவதாக அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மக்களை நேசித்த தலைவர் எனவும், கொரோனா காரணமாக இறுதிக் கிரியைகளை எதிர்பார்த்தளவு செய்ய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மாபெரும் நிகழ்வு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் தமக்கு அனுபவமில்லை என சிலர் கூறிய போதிலும அரசியலுக்கு அனுபவம் தேவையில்லை நல்ல இதயம் இருந்தால் போதும் என தமது தந்தை அறிவுரை கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருட்டுக்கு பின்னர் நிச்சயம் வெளிச்சம் உண்டு எனவும், நிச்சயமாக சேவல் கூவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பினர், முப்படையினர், சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் கல்வி, வீடமைப்பு உள்ளிட்ட மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தமது தந்தையினால் காணப்பட்ட அனைத்து கனவுகளும் மக்களின் சார்பில் நிறைவேற்றுவதற்கு ஜீவன் தொண்டமானாகிய தாம் நிச்சயம் பாடுபடப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir