இன்று வெள்ளிக்கிழமை பொசன் பௌர்ணமி தினத்தில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர்.
இளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை வைத்து ஒரு கடி கடித்தது போல நிழல் மறைத்திருக்கும்.
அதனால்தான் இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்பிரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என பெயர் வைத்துள்ளனர்.
ஆசிய, ஐரோப்பா, அவுஸ்திரோயாவின் பல நாடுகளில் இன்று ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் தென்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு 12.15 முதல் நாளை அதிகாலை 2.30 மணிவரை இந்தியா, இலங்கையிலும் இந்த சந்திரகிரகணத்தை மக்கள் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்படுகிறது.