சீமெந்து மீதான செஸ் வரியை அதிகரிக்கும் அரசின் தீர்மானத்தால் சீமெந்து பை ஒன்றின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என்று பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக சீமெந்து விநியோகத்தில் ஏகபோகத்தை உருவாக்க வாய்ப்புள்ளது என்று பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பவுடர் மற்றும் பொதியின் தரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.