ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாடுமுழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக, இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

நேற்றும், நேற்று முன்தினமும் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை.

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை முன்னெடுத்துச் செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும், கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir