எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் சீட்டு அச்சிடும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் இரவு வாக்காளர் சீட்டு அச்சிடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொழும்பு, களுத்துறை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான வாக்களார் சீட்டுக்கள் இறுதியாக அச்சிடப்படவிருந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவசர உத்தரவொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்தமைக்கு இணங்க, வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் கூறகின்றன.
இதேவேளை ஒருகோடியே 70 இலட்சம் வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளை அரச அச்சகத் திணைக்களம் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.