
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 இலிருந்து 134ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆகக் காணப்படுகின்றது.
தற்போது 447 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 140 பேர் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 60 பேர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலும், 67 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 21 பேர் இரணவில வைத்தியசாலையிலும், 55 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும், 07 பேர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையிலும், 97 பேர் வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மேலும் 317 பேர் 31 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.