ஊர்காவற்றுறையில் மக்கள் போராட்டம்; கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு நிறுத்தம்

ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக அமைக்க காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாரந்தனை வடக்கு ஜே/56  தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் அமைக்கப்ட்டுள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கும் நோக்கில் குறித்த இரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதும் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படமெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply