ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் அதிகாலை வேளையில், ரம்ழான் மாதத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிசார் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்கதலுக்கு இலக்காகிப் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் பொலிசார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்குப் பாலஸ்தீன அமைப்புகள் பலவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இஸ்ரேல் பொலிஸார், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதலையே தாம் நடத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
T01