ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி நேட்டோவில் இணைந்தது பின்லாந்து!

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேட்டோ கூட்டமைப்பில் 31 ஆவது அங்கத்துவ நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் தொலைவிற்கு, மிக நீண்ட நில எல்லையைக் கொண்டுள்ள நாடாக பின்லாந்து காணப்படுகிறது.

அந்த எல்லைப் பகுதியில் 200 கிலோமீற்றர் தொலைவிற்கு வேலி அமைக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களைக் கண்காணிப்பதற்காக மின்சார உணரிகள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த வேலியை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிப்பதற்கு பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply