நுவரெலியா ஊடான பிரிட்டன் காலத்து ரயில் பாதை புனரமைக்கப்படவுள்ளது

நானு ஓயாவில் இருந்து நுவரெலியா ஊடாக ராகலை வரையான பிரித்தானிய காலத்துக்குரிய ரயில் பாதையைப் புனரமைப்பதற்குப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

31 கிலோமீற்றர் நீளமுள்ள குறித்த ரயில் பாதையானது ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இருப்பினும், இது வணிக ரீதியாக வெற்றிபெறாததால் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டது.

BOT (கட்டமைத்தல், இயக்குதல், இடமாற்றம்) மாதிரியின் கீழ் இந்தப் பாதையைப் புனரமைப்பதற்கு வருங்கால வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.

உலகின் ஆறாவது மிக உயரமான ரயில் நிலையமானது கந்தபொலவில் அமைந்துள்ளது எனவும் பந்துல இந்தன் போது குறிப்பிட்டிருந்தார்.

குறித்த புனரமைப்புப் பணியினை மேற்கொள்வதால், சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் பந்துல தெரிவித்திருந்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply