சீனப் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை!

சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்புத் தொடர்பான விடயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரியவருகிறது.

குறித்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ ஷாங்பூ, இடதுசாரிக் கொள்கையுடைய இரு நாடுகளுக்கிடையிலும் வலுவான நட்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

சீன – ரஷ்ய நட்பில் எந்தவித எல்லையும் இல்லை, என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சோய்குவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் மொஸ்கோவில் புடினைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை நினைவுகூரத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir