சூடான் நெருக்கடி; போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இராணுவம்

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவ ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே தொடர்ந்து நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் 72 மணி நேரப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறித்த போர் நிறுத்தமானது, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மோதல் வெடித்தலிருந்து மூன்றாவது தடவையாக அவர்கள் மோதலை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

48 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இராணுவத்திற்கும் துணை இராணுவ ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

ஏப்ரல் 15 ஆம் திகதி வெடித்த மோதலினால் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மோதலில் ஈடுபட்ட  இரு தரப்பினரும் சுதந்திரமாக போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

சூடானில் நடக்கும் வன்முறைகள் முழுப் பிராந்தியத்தையும் அதற்கு அப்பாலும் ஒரு பேரழிவு அபாயத்துக்கு உட்படுத்தும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply