யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட கிழக்குப் பகுதிகளில் பூரண கடையடைப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட கிழக்குப் பிரதேசங்களில் இன்று பூரண  கதவடைப்பால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் திணிப்பு மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகளால்  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பெரும்பாலான நகரங்களிலும் கிராமங்களிலும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக பூட்டப்பட்டதுடன் தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறவில்லை. மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.

ஆனாலும், அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதோடு அரச வங்கிகள் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடையடைப்புக் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்வு முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்கள், பஸ் பயணிகள், அன்றாடத் தொழிலாளர்கள் எனப் பலரும் தாம் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply