சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகத் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு புதிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
பிறப்பு வீதத்தின் அடிப்படையில் சீனாவைப் பின்தள்ளி இந்தியா தற்போது முன்னணி வகிக்கும் நிலையில், சீன அரசு, குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்க பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டுவருகிறது.
மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமணத் தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அதன் அடுத்தகட்டமாக திருமணமாகாத பெண்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேற்று விடுப்பை எடுத்துக்கொண்டு, செயற்கைக் கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
T01