ஆசியாக் கண்டத்தின் மிகவும் ஆழமான எண்ணெய்க் கிணறில் துளையிடும் பணிகள் ஆரம்பம்!

ஆசியக் கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய்க் கிணற்றினைத் துளையிடும் பணியைச் சீனாவின் சினோபெக் (Sinopec)) நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதிக எண்ணெய் வளம் நிறைந்த டக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில், சுமார் 31 ஆயிரம் அடி ஆழத்திற்கு யூஜின் எனப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய்க் கிணற்றின் துளையிடும் பணிகள், 6 மாதங்களில் முடிவடையும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த எண்ணெய்க் கிணறானது, நில மட்டத்திலிருந்தான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட 2,000 அடி அதிகமான ஆழம் கொண்டதாக அமையும் எனக் கூறப்படுகிறது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply