இலங்கை மற்றும் எமிரேட்ஸிக்கு இடையே , இலங்கையைச் சிறந்த இடமாக மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, எமிரேட்ஸானது இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (மே 02) ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஆரம்பிக்கப்பட்ட அரேபிய பயணச் சந்தையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
எமிரேட்ஸின் வர்த்தக அதிகாரி அஹ்மத் குரி, எமிரேட்ஸின் மூத்த துணைத் தலைவர் சந்தன டி சில்வா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எமிரேட்ஸ் நாட்டின் தலைவர், இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பத்மா சிறிவர்தன, மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தாம் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்ருந்தார்.
T02