ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல, பசறை, எல்பிட்டிய, நாகொட, கொட்டபொல மற்றும் பஸ்கொட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தில் விரிசல் , இருக்கும் விரிசல் ஆழமடைதல் மற்றும் நிலச்சரிவு – மரங்கள், மின் கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்திருப்பது போன்ற நிலச்சரிவுக்கு முந்தைய அறிகுறிகளைக் கவனிக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கேட்டுக்கொண்டுள்ளது.
சரிவுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தரைகள் மற்றும் சுவர்களில் விரிசல்களும், நீர்க்கசிவுகளும் திடீரெனத் தோன்றுதல், சேற்று நீர் வெளிப்படுதல், ஏற்கனவே உள்ள நீரூற்றுகளில் அடைப்பு அல்லது மறைதல் போன்றவை ஏற்படுதல் குறித்தும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கனமழை தொடர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாகச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
T03