பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் பயங்கரவாதத்தின் பரந்த வரையறைகளை குறைக்கக் வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
பொலிஸாரால் தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை நீக்க வேண்டும் என அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை பாதகமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். அதன் மூலம் ஒரு சாதாரண எதிர்ப்புச் செயலைக் கூட பயங்கரவாதச் செயல் என வரையறுப்பது மக்களுக்கும் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
30 வருடங்களாகப் பயங்கரமான போரை எதிர்கொண்ட நாட்டுக்குப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடப் புதிய சட்ட ஏற்பாடுகள் தேவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்தச் சட்டமூலம் திருத்தப்பட்டால், அதை ஆதரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
t03