கடவுச்சீட்டுக்கான விண்ணப்பதாரர்கள் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரம் குறித்து முன் பதிவின்றி திணைக்களத்திற்கு செல்ல வேண்டாம் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய கேட்டுக்கொண்டுள்ளனர்.
திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கயும் அவசரமாக பாஸ்போர்ட் தேவைக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கக்கூடியவர்கள் மட்டுமே திணைக்களத்திற்குச் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விடுமுறையைக் கழித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேற விரும்புபவர், அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர், உடனடியாகப் புறப்பட வேண்டியவர்கள் உரிய ஆவணங்களுடன் திணைக்களத்தை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்குவதற்கான புதிய முறையை நடைமுறைப்படுத்தத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்வரை, பொதுமக்கள் முன் பதிவின்றி திணைக்களத்திற்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
t03