டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக இலங்கையின் இறக்குமதியின் அளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை- மித்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற கலத்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் நிலவி வரும் நெருக்கடிக்கு டொலரின் பற்றாக்குறையே காரணம் என்றும் அரசாங்கமானது, டொலரினைக் கொண்டு வருவதற்கு நிலையான பாதையினை உருவாக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வாறே, சுங்க வரிகளிலிருந்தும் ஏனைய வரிகளிலிருந்தும் இழந்த பணத்தைச் சம்பாதிப்பதற்காக, மற்ற வரிகள் அதிகரிக்கப்படுகின்றன, எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
t03