நைஜீரிய சமையல் கலைஞரான ஹில்டா எஃபியோங் பாஸ்ஸி என்பவர், உலக சாதனை படைக்கும் முயற்சியில் 100 மணித்தியாலங்கள் இடைவிடாது சமைத்து புகழ் பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஹில்டா பேசி என்று அழைக்கப்படும் இந்தச் சமையல் கலைஞர், கடந்த வியாழன் தொடக்கம் திங்கள் வரை தொடர்ச்சியாக, நைஜீரிய உணவு வகைகளில் சிறந்த 55 க்கும் மேற்பட்டவற்றையும் 100 க்கும் மேற்பட்ட ஏனைய உணவுகளையும் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
அனைத்தையும் ஆராய்ந்த கின்னஸ் உலக சாதனைக் குழு, அவர்களின் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? என்பதை அவதானித்து, பாஸ்ஸியை சாதனையாளராக அறிவித்தனர்.
2019 ஆம் ஆண்டில் 87 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் சமைத்த இந்திய சமையல் கலைஞர் லதா டோண்டனை முறியடித்து இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
T01