வட்ஸ்அப் செயலியில் மெட்டா நிறுவனம் புதிய அம்சமொன்றை இணைத்துள்ளது.
வட்ஸ்அப் பயனர்கள் தமது குறிப்பிட்ட அரட்டைகளைப் பிறர் அறியாது பூட்டி வைக்கப்பதற்கு அனுமதிக்கும் முகமாக குறித்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச் செயற்படுத்தலாம் என மெட்டா நிறுவனத்தின் மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரட்டை பூட்டி வைக்கப்பட்டவுடன், அதன் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை மறைத்து, தனி கோப்புறையில் சேமிக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வட்ஸ்அப் செயலியில் இணைக்கப்பட்டுள்ள குறித்த புதிய அம்சம் வட்ஸ்அப்பின் தனித்துவமான அம்சம் என பயனர்கள் பலர் வரவேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.