தென் பசிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் மீண்டும் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.
7.1 ரிக்டர் அளவுடையதாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பிஜி மற்றும் நியு கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த இதே பகுதியில் நேற்று 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும், பிஜி தீவுகளில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது எனவும் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.