இலங்கை, இந்தியாவுக்கிடையில் கூட்டுப்பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடந்த மே 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, இலங்கைக் கடற்படைத் தலைவர், கேரளத்தின் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தின் 23 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் சிறப்பு அணிவகுப்புக்கு தலைமை தாங்குவார் என இந்திய கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று, புதுடில்லியில் இந்தியக் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர்.ஹரிகுமாரைச் சந்தித்து, இலங்கை மற்றும் இந்தியாவின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறிமுறைகள் குறித்து விவாதித்துள்ளார்.

இந்தியாவின், அண்டை நாட்டுக்கான முதல் கொள்கை அடிப்படையிலும், பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற அடிப்படையிலும், இரு நாடுகளும் கடல்சார் களத்தில் தங்கள் தொடர்புகளை அதிகளவில் மேம்படுத்தியுள்ளன.

இலங்கைக் கடற்படைத் தளபதியின் தற்போதைய விஜயமானது இரு கடற்படைகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பை அதிகரிப்பதன் அடையாளமாகக் காணப்படுகின்றது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கடல்சார் சவால்களைச் சமாளிப்பதற்கும் இரண்டு நாடுகளினதும் ஒத்துழைப்பை குறித்த சந்திப்பானது புதுப்பிப்பதாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply