இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியீடு

அதிகரித்து வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பயிற்சிக்கான பிரதிப் பொதுமுகாமையாளர் பி.ஜி.ஜி.எஸ் யாப்பா, இவ்வருடம் மாத்திரம் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் 1,150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2021 இல் 552, 2022 இல் 1,337 மோசடிகளும் பதிவாகிய நிலையில், 2023 இன் முதல் ஐந்து மாதங்களில் இவ்வெண்ணிக்கை 1,156 ஆக அதிகரித்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி மக்கள், குறித்த மோசடியினால் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது, எனவும் அவர் கூறினார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply