நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் , கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
சில பாடசாலைகளில் சித்தியடைய முடியாதவர்கள் என கருதி சில மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படாமல் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.