தனியார் மருந்தகங்களில் மருந்துத் தட்டுப்பாடில்லை; சந்திக கங்கந்த

அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தனியார் மருந்தகங்களில் போதியளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதால் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கமும் இலங்கை மருந்தக சங்கமும் தெரிவித்துள்ளன.

செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த, அரசாங்க வைத்தியசாலைகள் மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்வது தொடர்பில் தாம் நன்கு அறிந்திருந்தாலும், தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, எனத் தெரிவித்தார்.

மேலும், அரசு மருத்துவமனைகள் வழங்கும் மருந்துச் சீட்டுக்களுடன் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நோயாளிகள் வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம், எனவும் தெரிவித்தார்.

மருந்துகளின் விலைகள் 10-15 வீதத்தால் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் மருந்துகளின் விலைகள் 30 வீதத்தால் குறைக்கப்படலாம் எனவும் கங்கந்த தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இலங்கை மருந்தக சங்கத்தின் தலைவர் கலும் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை காணப்படுவதால், தனியார் மருந்தகங்களில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், நுகர் பொருட்கள், பம்பர்கள், சனிட்டரி பாட்கள், மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட பல மருந்துகளுக்கு அதிக தேவைகள் காணப்படுகின்றன என்றார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply