நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும்!

இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை வேளையிலோ அல்லது இரவு வேளையிலோ, மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றினாலும், மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது, தென்மேற்குத் திசையிலிருந்து வீசுவதுடன் மணிக்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply