கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 (2023) அனுமதி அட்டைகளை பரீட்சார்த்திகளிடம் உரிய முறையில் வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் விஜேசுந்தர அனைத்துப் பாடசாலை அதிபர்களிடமும் கோரியுள்ளார்.
பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகளை அதிபர்கள் தடுத்து வைத்திருக்கக்கூடாது எனவும், அனுமதி அட்டைகளைத் தடுத்து, பரீட்சார்த்திகளைப் பரீட்சை எழுத அனுமதிக்காவிடின் அதற்கு அந்தப் பாடசாலைகளின் அதிபர்களே முழுப்பொறுப்பினை ஏற்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான நேர அட்டவணையை www.doenets.lk என்னும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தள முகவரியினூடாகப் பார்வையிடமுடியும்.
இந்நிலையில், பரீட்சை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112784208, 0112784537, 0112785922, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை மேற்கொண்டு அறியப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
T01