நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்ததுள்ளது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போரை ஆரம்பித்தது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை, உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் குறித்த நாடுகள் ஈடுபடுகின்றன.
இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும் குறித்த நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றது. 15 மாதங்களைக் கடந்தும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலகப் பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
T03