மன்னாரில் விகாரை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் புதிய பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் விகாரை அமைக்கும் பணிகளைக் கைவிடுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தையிட்டி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தனியார் காணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வினவியபோது, சிறிலங்கா இராணுவத்தின் 542 வது படைப் பிரிவு பொறுப்பதிகாரி விகாரை அமைக்கும் பணியை கைவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விகாரை அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட இடத்தை பேருந்து தரிப்பிடமாக மாற்ற இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply