ஜடேஜாவின் அசத்தல் ஆட்டம்! ஐந்தாவது கிண்ணத்தை வென்றது சென்னை

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்ற நிலையில் 5 வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் சென்னை அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களையும், ரித்திமான் சஹா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை அணியின் தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும், ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும், மத்தீஷ பத்திரண இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 215 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட களமிறங்கியது.

இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி சென்னை அணி வெற்றிபெற 15 ஓவர்களில் 171 ஓட்டங்களைப் பெறவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் 4 ஓவர் பவர் ப்ளே விளையாடப்படும். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 3 ஓவர்களை வீசலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை அணி 15ஆவது ஒவரின் இறுதி இரு பந்துகளிலும் ரவீந்திர ஜடேஜா அடித்த 6 மற்றும் 4 ஓட்டங்களால் வெற்றியிலக்கை அடைந்து 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது சென்னை அணி.

அணிசார்பில் அதிகபடியாக டெவோன் கொன்வே 47 ஓட்டங்களையும், சிவம் துபே 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் அணியின் நூர் ஹகமட் 2 விக்கெட்டுக்களையும், மோஹித் சர்மா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

சென்னை அணி 5 ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply