சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஆயிரம் முதல் ஆயிரத்து 200 ரூபாவாக நிலவிய கோழி இறைச்சி கிலோவொன்று ஆயிரத்து 500 ரூபா முதல் ஆயிரத்து 600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், சந்தையில் மீனின் விலையும் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோவொன்று ஆயிரத்து 900 ரூபாவிற்கும், பலயா மீன் கிலோவொன்று ஆயிரத்து 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுச் சந்தையிலும் மீன்களின் விலை அதிகமாக உள்ளது. கெலவல்ல கிலோ 2800 முதல் 3200 ரூபாய் வரையிலும், பலயா கிலோ 2000 ரூபாய், பாறை கிலோ 2400 ரூபாய், தலபத் கிலோ 3200 மற்றும் 3800 ரூபாய்க்கும், சால ஒரு கிலோ 650 ரூபாய்க்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.