கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு நேற்று மாலை சென்ற இளம் ஜோடியொன்று கோபுரத்தின் உச்சியில் உள்ள சுவரில் தங்களின் பெயர்களைச் செதுக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தாமரைக் கோபுரத்திற்குச் செல்லும் சிலர், அதன் மீது பெயர்கள் அல்லது முதலெழுத்துக்களை செதுக்குவதன் மூலம் தொடர்ந்து சேதப்படுத்துவதனால் பெரும் பராமரிப்புச் செலவு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோபுரத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதன் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாமரைக் கோபுரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
T02