டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பெர்னார்டு அர்னால்டை பின் தள்ளிவிட்டு மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் எனத் தரவுகள் தெரிவிக்கின்றது.
பிரான்ஸ் வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே கடும் போட்டி நிலவியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இந்நிலையில், மே 31 ஆம் திகதி அர்னால்டு டுஏஆர் பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.