உலகை மிரட்டும் மற்றுமொரு வைரஸ் தொற்று!

உலகளாவிய ரீதியில் கொரேன தெற்றைப் போன்ற அறிகுறியுடன் புதிய வகை வைரஸ் பரவுவதாக உலக சுகாதர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இந்த  வைரஸ் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகளும் விழிப்பு நிலையை அறிவித்துள்ளனர்.
ஆகவே குழந்தைகள், முதியவர்களை அதிகம் தாக்கும் குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய வைரஸின் வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் பரவும் புதிய நோய் குறித்து தமது அமைச்சு தொடர்ந்தும் விழிப்புடன் உள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அமெரிக்காவில் பரவும் வைரஸ் தொடர்பில் தாம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பேது வரை அமெரிக்காவிற்கு வெளியே ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை என்றாலும், எல்லைகளுக்கு அப்பால் அது பரவும் வாய்ப்பை கொண்டுள்ளது என்று இலங்கை சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் 2001, ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது எனவும், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் தொற்று முதன்மையாக மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சளி, காய்ச்சல் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸ், இருமல், தும்மல், தொடுதல் போன்ற நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் சுகாதர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைகுலுக்கல், வைரஸ் உள்ள பொருட்கள் அல்லது அதன் பரப்புகளைத் தொடுதல் என்பவற்றாலும் இந்த நோய் பரவும் ஆபத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply