மெட்டா(Meta) நிறுவனம் வட்ஸ்அப்பில் (WhatsApp) நாளுக்கு நாள் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்தவகையில், யூடியூப் (YouTube) போலவே வட்ஸ்அப்பினையும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் ,விருப்பமான சனல்களை (Channels) சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து அப்டேட்களைப் (Updates) பெறமுடியும் எனவும், நேரடியாக நிறுவனத்திற்கு குறுஞ்செய்திகளை(Messages) அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த வசதி தற்போது கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது எனவும், விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது.