பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல் 2022 செப்டெம்பர் வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், கொவிட் தடுப்பு விதிகளை மீறும் செயற்பாடுகளில் போரிஸ் ஜோன்சன் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்தி வருகிறன நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக நேற்று (09) போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
இதேவேளை, ”நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில், சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.
விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது” என போரிஸ் ஜான்சன் தனது பதவி விலகலை அறிவித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.