நைஜீரிய படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!

நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, திரும்பிச் செல்லும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தின் எக்போடி கிராமத்தில் இடம்பெற்ற  திருமண நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில், திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

அந்த படகில் பயணித்தவர்கள் தங்களது மோட்டர் சைக்கிளையும் அதே படகில் எடுத்து சென்றுள்ளனர்.

அதிக எடை காரணமாக படகு திடிரென ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியானதோடு தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100 க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,  அவர்களை தொடர்த்தும் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply