இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று சடுதியாக உயர்வடைந்துள்ளது
இலங்கை மத்திய வங்கியில் இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கியில் நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 303.19 ரூபாவாகவும், விற்பனை விலை 318.99 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையின் சில உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிலும் இன்று டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது
இந்நிலையில், இலங்கை வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும் அதன் விற்பனை விலை 335 ருபாகவும், மக்கள் வங்கியில் கொள்முதல் விலை 313.46 ருபாகவும் விற்பனை விலை 328.20 ருபாகவும், சம்பத் வங்கியில் கொள்முதல் விலை 311.28 ருபாகவும் விற்பனை விலை 328.00 ருபாகவும், ஹட்டன் நெஷனல் வங்கியில்(HNB) கொள்முதல் விலை 313.00 ருபாகவும் விற்பனை விலை 330.00 ருபாகவும் மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) கொள்முதல் விலை 307.00 ருபாகவும் விற்பனை விலை 327.00 ருபாகவும் உயர்ந்துள்ளது.