ஆரம்பமானது ஆஷஸ்! முதல் நாளில் 393 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

மேலும், பேர்ஸ்டோவ் 78 ஓட்டங்களும் மற்றும் சாக் கிராலி 61 ஓட்டங்களும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 78 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடை நிறுத்தியது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 14 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply