ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் குடியேறுவோருக்கு, 92000 அமெரிக்க டொலர் வரை மானியம் வழங்கப்படும் என அயர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த திட்டத்தை அந்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை1 ஆம் திகதி முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என அயர்லாந்து செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து தனது மேற்குக் கடற்பரப்பில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட அழகிய தீவுகளுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாகவே இந்த திட்டத்தை அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
92,000 அமெரிக்க டொலர் வரையிலான மானியங்கள், இந்த தீவுகளில் வெறுமையாக உள்ள அல்லது பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்க விரும்புவோருக்கு தான் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அயர்லாந்தில் சொத்துக்களை யார் வாங்கலாம் என்பதில் எந்த தடையும் இல்லை என்றாலும், ஒரு இடத்தை தம் வசம் வைத்திருப்பது, அங்கு வாழ்வதற்கான உரிமையை அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதையும் அங்கு குடியேற திட்டமிடும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.