வைத்திய கலாநிதி அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் இன்று வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
சாரங்கனின் “வாழ்க்கை” எனும் இந்தக் கவிதை தொகுப்புத் வெளியீட்டு நிகழ்வு சாரங்கனின் 31ஆம் நாள் நினைவு தினமான இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி வீதி கோண்டாவிலில் உள்ள ராசமணி மண்டபத்தில் நடைபெற்ற சாரங்கனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வின்போது நடைபெற்றது.
வைத்திய கலாநிதி வேல் சாரங்கன் கடந்த 25.05.2023 அன்று நோயின் காரணமாக இயற்கை எய்தியிருந்தார். இந்நிலையில் சாரங்கனால் எழுதப்பட்டு தொகுக்கப்படாத கவிதைகளை தொகுத்து, “வாழ்க்கை” எனும் கவிதை தொகுப்பாக சாரங்கனோடு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் (2004 உயர்தரம்) கல்வி கற்ற நண்பர்கள் சாரங்கனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தனர்.