கிளிநொச்சி கரைச்சி பிரதேச பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக கூறியும் அரச அதிகாரிகளின் சட்ட விரோத காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்த கோரியும் அப் பிரதேச மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் வரை சென்று, மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்துள்ளது.