எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தொழில்துறையில் இருப்பவர்கள் தங்கள் வியாபாரத்தை கைவிட்டதன் காரணமாகவும் கோழி பண்ணை தொழிலில் இருந்து பல வர்த்தகர்கள் வெளியேறியதன் காரணமாகவுமே இவ்வாறான தாய்க் கோழிகள் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பண்ணைகளில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் குஞ்சுகள் பொரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனவும் அமைச்சர் தெரிவித்ததுடன் இதன்மூலம் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என்பவற்றிற்கு மூன்று மாதங்களுக்குள் தீர்வு எட்டப்படும் என நம்புவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.