இலங்கை இனப்பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வு – அண்ணாமலை வலியுறுத்தல்!

இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி இந்திய தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை எனவும் 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பிறகு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மலையகத்திலிருந்து செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட விடயம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply